சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூர் போட்டியில் இந்திய வீரர் சூரஜ் சந்த் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சென்னையில் ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூர் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் சூரஜ் சந்த், தென் கொரிய வீரர் ஜியோங்மின் ரியு உடன் மோதினார். அப்போட்டியில் சிறப்பாக ஆடிய சூரஜ் சந்த், 11-5, 11-9, 11-3 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை ரவுகையா ஒத்மான், 12-10, 11-7, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
