எம்எல்எஸ் கால்பந்து மெஸ்ஸி மாயா ஜாலம் மயாமி வெற்றி கானம்: போராடி வீழ்ந்த கொலராடோ

டென்வர்: கொலராடோ ரேபிட்ஸ் அணிக்கு எதிரான மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டியில், லியோனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால், இன்டர் மயாமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.  அமெரிக்காவின் டென்வர் நகரில் மேஜர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி – கொலராடோ ரேபிட்ஸ் அணிகள் மோதின.

போட்டி துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 18வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய மெஸ்ஸி, அதனை கோலாக்கினார். அதைத் தொடர்ந்து 45+5வது நிமிடத்தில் மயாமி அணியின் ஜெர்மேன் பெர்ரொமே மேலும் ஒரு கோல் போட்டு அசத்தினார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் கொலராடோ அணியின் ரபேல் நவரோ, 58வது நிமிடத்தில் சிறப்பாக ஆடி கோல் போட்டார். அடுத்த 4வது நிமிடத்தில் அந்த அணியின் டேரன் யாபி அணியின் 2வது கோல் போட்டு போட்டியை சமன்படுத்தினார். போட்டியின் கடைசி கட்டத்தில் 79வது நிமிடத்தில் மெஸ்ஸி அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று அணியின் 3வது கோல் போட்டு கரவொலி பெற்றார். அதனால், 3-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories: