- கனிமொழி சாதல்
- திமுக
- பெண்கள்
- சாரி
- கனிமொழி எம்.பி.
- நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட்
- நெய்வேலி
- சபா ராஜேந்திரன்
- எடப்பாடி பழனிசாமி
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து நெய்வேலி என்எல்சி ஆர்ச்கேட் எதிரில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பேசியதாவது: பாஜ முன்பு எடப்பாடி பழனிசாமி கைகட்டி நிற்கிறார். தமிழக உரிமைகளை பறிக்கவோ, ஏமாற்றவோ நினைத்தால் எதிர்த்து போராடுவோம்.
தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைக்க கூடாது. நமது கூட்டணி கொள்கை கூட்டணி. எதிரணியில் உள்ள அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். மசோதா தோற்கடிக்கப்பட்டது பாஜவிற்கு முதல் தோல்வி, தொடர்ந்து தோல்விகள் வரப்போகிறது. தமிழ்நாடு மொழி உரிமை சுயமரியாதை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி, நேற்று திருக்கடையூர் கடைவீதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மகளிர் மசோதா என்று பொய் சொல்லி தமிழ்நாட்டிற்கு எதிரான மசோதாவை கொண்டு வந்தீர்கள். எங்கள் தலைவர் ஸ்டாலின் தோற்கடித்துள்ளாரே என்று அதிமுக, பாஜவினரை கேள்வி கேளுங்கள். ஏன் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தீர்கள் என்று கேளுங்கள், எடப்பாடி எதுவும் சொல்ல மாட்டார். கையை கட்டிக்கொண்டு நிற்பார். மகளிர் மசோதாவை நிறுத்திவிட்டோம் என்று சொல்கிறார்கள்.
33 சதவிகிதத்தை கொடுத்தால் திமுக ஆதரிக்கும். இருப்பதில் பகிர்ந்து கொடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இன்றைய பசிக்கு இருப்பதை பகிர்ந்து கொடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் புதிதாக பானை வைத்து சமைத்து கொண்டு வந்து கொடுக்கிறோம் என்று சொல்வது எங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் நீங்கள் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
