×

சொன்னாரு..! செஞ்சாரு..!! இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம்

 

சொன்னாரு: தமிழகத்தை மற்ற துறைகளில் உயர்த்துவது போன்றே விளையாட்டுத் துறையையும் உயர்த்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது.

செஞ்சாரு: தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்ற திமுக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சென்னையில் சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023, சென்னையில் நடைபெற்றது. 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை-2023 போட்டிகள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான உலக சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு அரசு மற்றும் ரேசிங் புரோமோசன் பிரைவேட் லிட். ஆகியன இணைந்து இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை நடத்தியது. இப் போட்டி நடத்தியதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் மற்றும் ஒரே நகரமாக சென்னை திகழ்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி 2024ம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பூடான். நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர் / வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

டேபிள் டென்னிஸ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2025 உலக டென்னிஸ் (WTT) ஸ்டார் கண்டெண்டர் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக விளங்கும் 14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் 2025ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதிப்புமிக்க சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024 சதுரங்க போட்டி 2024ம் ஆண்டு நடத்தியது. இதில் 8 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது போன்று பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகள் தமிழ் நாட்டில் நடைபெற்றது.

Tags : Sonnaru ,Sencharu ,India ,DMK government ,Tamil Nadu ,
× RELATED ஸ்டாலினின் சித்தாந்தத்தை கண்டு பயம்...