சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. அதிபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும் பிற பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. கரூர் மற்றும் வேலூரில் 104 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளை குடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ெ தன் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை நேற்று பெய்துள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. இதை நிலை 23ம் தேதி வரையில் நீடிக்கும்.
அதன் தொடர்ச்சியாக 24, 25ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதையடுத்து, 23ம் தேதி வரையில் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு.
ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.
