சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதி நிலையை சரி செய்ய அரசு தலைமை செயலாளர் அரசு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் 6 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மே மாதம் தொடங்கும் இந்த நடவடிக்கை 6 மாதங்களுக்கு இது அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு முதல்வர், அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதம், எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 20 சதவீதம் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தார்.
