ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஆபரேஷன்

திருமலை: ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன்கல்யாண் நேற்றுமுன்தினம் அதிகாரிகளுடன் வழக்கம்போல் தனது அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. இந்நிலையில் அவரது மருத்துவர்கள் ஆலோசனைப்படி உடனடியாக அமராவதியில் உள்ள மருத்துவமனையில் அன்றிரவு சேர்க்கப்பட்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அடுத்த சில நாட்களுக்கு தனது அலுவல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: