×

ராஜபாளையம் தொகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு: டிஎஸ்பி துவக்கி வைத்தார்

ராஜபாளையம், ஏப்.19: ராஜபாளையம் தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ராஜபாளையம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மற்றும் சேத்தூர் பகுதிகளில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் முக்கிய சாலைகளில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். டிஎஸ்பி பசிணா பீவி கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தி, ரமேஷ் கண்ணன், ராஜேஸ் மற்றும் ராஜபாளையம் உட்கோட்ட காவல்துறையினர், குஜராத் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முக்கிய சாலைகளில் பேரணியாக வந்தனர்.

 

Tags : Police flag parade in ,Rajapalayam ,DSP ,flag parade ,Rajapalayam constituency ,Rajapalayam… ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி