- பள்ளி
- வருடாந்திர தினம்
- தொண்டி
- தினகதன் வயல் அரசு தொடக்கப்பள்ளி
- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- ஜனாதிபதி
- வடிவேல்
தொண்டி, ஏப்.19: தொண்டி அருகே உள்ள தினைக்காத்தான் வயல் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. தினைக்காத்தான் வயல் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை லதா ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரதநாட்டியம், கும்மிபாட்டு, பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனம் வெகுவாக கவர்ந்தது. முன்னாள் வார்டு உறுப்பினர் ராஜு, ஆசிரியர்கள் தனலெட்சுமி, அமுதா, வனஜா, சத்யா உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
