பாட்னா: பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் சமீபத்தில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 14ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நிதிஷின் ராஜினாமாவை தொடர்ந்து பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சாம்ராட் சவுத்ரியை முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் விஜய்குமார் சவுத்ரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
