×

பொம்மை கார்களில் வெடிகுண்டு 4 தீவிரவாதிகள் டெல்லியில் கைது

புதுடெல்லி: தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 4 பேரை டெல்லி காவல்துறை நேற்று கைது செய்தது. இதுகுறித்து டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “உளவுத்துறை தலைமையிலான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் பீகார் ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த மொசைப் அகமது, முகமது ஹம்மாத், முகமது சோஹைல் மற்றும் ஷேக் இம்ரான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரும் டெல்லி செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உளவு பார்த்து வந்துள்ளனர். மேலும் அயோத்தி ராமர் கோயில், நாடாளுமன்றம் மற்றும் சில ராணுவ உயர் நிலைகள் போன்ற இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பொம்மை கார்களில் வெடிகுண்டுகளை வைத்து, நெரிசல் அதிகமுள்ள இடங்களில் வெடிக்க வைக்க திட்டம்தீட்டியுள்ளனர். கைதான நான்கு பேரும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Tags : Delhi ,New Delhi ,Delhi Police ,Maharashtra ,Odisha ,Bihar ,
× RELATED ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற...