×

நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் 25% இட ஒதுக்கீட்டில் எல்கேஜி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் ஏப்.19: திருவள்ளூரில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்கேஜி வகுப்பில் சேருவதற்கு இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மை, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2026-2027ம் கல்வி ஆண்டிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்கேஜி வகுப்பில் சேர்ந்து பயில தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், வரும் 20ம் தேதி (நாளை) முதல் மே.18ம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் (இநிக), மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), வட்டார வளமையம் ஆகிய அலுவலகங்களிலும், தனியார் பள்ளிகள் மற்றும் இ-சேவை மையங்களிலும் சேர்க்கைக்கான இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : LKG ,Thiruvallur ,Collector ,M. Pratap ,Thiruvallur District ,
× RELATED கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்