×

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்  நிகேதன் பாடசாலா பள்ளி மாணவி முதலிடம்

திருவள்ளூர், ஏப்.18: திருவள்ளூர்  நிகேதன் பாடசாலா பள்ளி மாணவி பூர்ணா , சிபிஎஸ்சி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த வேடங்கி நல்லூரில் அமைந்துள்ள  நிகேதன் பாடசாலா பள்ளியில் 203 மாணவர்கள், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாணவி பூர்ணா , 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, திருவள்ளூர் மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் மாணவி கனிஷ்கா 488 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் 2ம் இடமும், மாணவன் எஸ்.என்.தன்வந்த்குமார் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், பாடவாரியாக 21 மாணவர்கள் 99 மதிப்பெண்களும், 24 மாணவர்கள் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், 41 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கும், 106 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில், சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், இதற்குக் காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் ப.விஷ்ணுச்சரண், முதன்மை செயல் அலுவலர் மோ.பரணிதரன், முதல்வர் கவுரி தினேஷ், துணை முதல்வர் டாக்டர் ஷாலினி மோகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Nikethan Padasala School ,CBSE ,Tiruvallur ,Poorna ,Thiruvallur ,Vedangi Nallur ,Tiruvallur… ,
× RELATED ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி,...