×

திருத்தணியில் தபால் ஓட்டின்போது போலீசாரிடம் வாக்கு சேகரித்த கட்சிகள்

திருத்தணி, ஏப்.26: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 560 போலீசார் மற்றும் 150 போக்குவரத்து தொழிலாளர்கள், இதர அத்தியாவசிய அரசு சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தபால் வாக்கு செலுத்த வந்த போலீசார் வரிசையில் நின்று தங்களின் தபால் வாக்கை செலுத்தினர். நேற்று மட்டும் 250 பேர் தபால் வாக்கு செலுத்தியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். வரும், 20ம் தேதி தபால் வாக்கு செலுத்த இறுதி வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தபால் வாக்கு செலுத்த கோட்டாட்சியர் அலுவலகம் வந்த போலீசார் மற்றும் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம், வேட்பாளர்கள் சார்பில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வாக்கு கேட்டனர்.

Tags : Tiruttani ,Election Commission ,
× RELATED ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி,...