×

கடந்த மாத கணக்கீட்டில் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

ஊட்டி, ஏப்.18: நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் கூறியிருப்பதாவது: நிர்வாக காரணங்களினால் நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் எல்லநள்ளி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட கேத்தி பாலாடா 759 மின் இணைப்புகள், காட்டேரி 459 மின் இணைப்புகள், கெக்கட்டி 1232 மின் இணைப்புகள், பழைய அருவங்காடு 423 மின் இணைப்புகள் என மொத்தம் 2873 இணைப்புகள் உள்ள பகிர்மான பகுதிகளில், ஏப்ரல் (04-2026) மாதத்திற்கான மின் கணக்கீட்டிற்கு பதிலாக பிப்ரவரி (02-2026) மாத மின் கணக்கீடு (Previous Month Consumption) முறையில் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதி மின்நுகர்வோர்கள் கடந்த மாத கணக்கீட்டின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Nilgiris Electricity Distribution Circle ,Supervising ,Sivakumar ,Kethi Palada ,Katheri ,Kekkatti ,Ellanalli ,Nilgiris Electricity Distribution Circle… ,
× RELATED கூடலூர் வழியாக பெங்களூர் சென்ற காரில்...