×

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் ஆதாம் நீருற்று

ஊட்டி, ஏப்.19: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் இதமான காலநிலை நிலவும் ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. ஊட்டி வந்துள்ள சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள கடைகளில் தைலம், பிளம்ஸ், பிச்சீஸ், ஊட்டி தேயிலைத்தூள் போன்றவை வாங்கி செல்கின்றனா்.

பிரதான சாலையான கமர்சியல் சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகாில் உள்ள ஆதாம் நீருற்று, சாலையோர பூங்காக்கள் போன்றவைகள் பொலிவுப்படுத்தப்பட்டு வருகிறது. சோிங்கிராஸ் பகுதியில் உள்ள ஆதாம் நீருற்றிற்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

 

 

Tags : Adam's Falls ,Ooty ,Nilgiris district ,Botanical Garden ,Rose Garden ,
× RELATED கூடலூர் வழியாக பெங்களூர் சென்ற காரில்...