×

தீ விபத்து தடுப்பு பயிற்சி

கூடலூர், ஏப்.18: கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பயிற்சி நிலைய முதல்வர் ஷாஜி எம் ஜார்ஜ் தலைமை வகித்தார்.

கூடலூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தொண்டு வாரம் அனுசரித்தல் குறித்த விளக்கங்கள் அளித்தனர். தீ விபத்துகளை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்க நிகழ்ச்சிகள் மூலமும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

 

Tags : Prevention Training ,Gudalur ,Gudalur Fire and Rescue Department ,Estate Workers Vocational Training Center ,Thevarcholai Road, Gudalur ,Shaji M George ,
× RELATED கூடலூர் வழியாக பெங்களூர் சென்ற காரில்...