ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபக் மாவட்டத்தில் உள்ள கெரடாரி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் மவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி பவன் குமார் கூறுகையில், “சுட்டு கொல்லப்பட்ட நான்கு பேரில் சஹ்தியோ மஹ்தோ என்பவர் ரூ.15 லட்சம் பரிசு தொகையுடன் தேடப்பட்டு வந்தார். மிசிர் பெஸ்ரா என்ற மாவோயிஸ்ட் ரூ.1 கோடி பரிசு தொகையுடன் தேடப்பட்டு வந்தார். இந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் காயமடைந்தனர்” என்றார். மாவோயிஸ்ட்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டனர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
