×

27 பாஜ வேட்பாளர்களுக்கும் கார்பரேட் நிதி உதவி ஷோஹோ நிறுவன உரிமையாளரிடம் விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: ஷோஹோ நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதியை தேர்தலில் பாஜ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பயன்படுத்துவது குறித்து வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பி.சுந்தரவடிவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஷோஹோ நிறுவனத்தின் நிறுவனர் தர் வேம்பு தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதியை சட்டவிரோதமாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 27 தொகுதிகளில் கார்ப்பரேட் நிதி புழங்குகிறது. இது தேர்தலின் நடுநிலையை பாதிக்கச் செய்யும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உண்மையான தேர்தல் செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும். தவறினால் தகுதி நீக்கம் செய்யப்படலாம். தேர்தலில் கார்ப்பரேட் நிதி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால் அது ஊழல் நடவடிக்கைக்கு சமம். எனவே, ஷோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜ வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோரின் வங்கி கணக்குகளையும், நிதி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். கார்ப்பரேட் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை நடத்தி விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Shoho ,BJP ,Chennai ,Sridhar Vembu ,Madras High Court ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக...