×

தவெக தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாததை அறிவித்த விஜய்: சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் செயல்படுத்தச் சாத்தியமில்லாததை விஜய் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்.

இந்நிலையில், அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்லது. குறிப்பாக, தவெக அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான ‘மக்கள் நலன் காப்பீடு’ அட்டை வழங்கப்படும். கேன்சர், இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்பட அனைத்து விதமான மருத்துவ சேவைகளுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம் என்ற அறிவிப்பு சாத்தியமில்லாத ஒன்று என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவ்வளவு குடும்பங்களுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு பெற பல்லாயிரம் கோடி செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு பெறுவதற்கே குறைந்தபட்சம் ரூ.40,000 வரையிலும் செலவளிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு தமிழகத்தில் 2 கோடிகும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் கணக்கிட்டால் அது தமிழக அரசின் பட்ஜெட்டில் சற்றேறக்குறைய நான்கில் ஒரு பங்கு இதற்கு மட்டுமே செலவிட வேண்டும். இந்த நிலையில் யாரோ எழுதிக்கொடுத்த தேர்தல் அறிக்கையைச் சாத்தியமா இல்லையா என கவனிக்காமல் வெறுமனே படித்துவிட்டுச் செல்கிறார் விஜய் எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Tags : Vijay ,TVM ,Chennai ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...