×

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக ஆதவ் அர்ஜுனா மீது மேலும் ஒரு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தனது மனைவிக்கு உள்ள தொடர்பை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதி வாக்காளரான எம்.கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னை வெளிப்படையான அரசியல் ஆதரவாளராகவும், அரசியலின் தூய சக்தியாகவும் முன்னிறுத்திக்கொள்ளும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது மனைவிக்கு மார்ட்டின் ரியல்கான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொடர்பு குறித்து விவரங்களை வெளியிடாமல் மறைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏப்ரல் 16ல் அளித்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் உள்ள குறைபாடுகள், தகவல் மறைப்பு, தவறான தகவல் ஆகியவை குறித்து வருமான வரித்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Aadav Arjuna ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu Victory Corporation ,Willivakkam Constituency ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக...