×

2011 மக்கள் தொகைப்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஒப்புதல்

 

டெல்லி: 2011 மக்கள் தொகைப்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். 2011 மக்கள் தொகைப்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 33 ஆக குறையும். தற்போதைய எண்ணிக்கையில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 தொகுதிகள் கிடைக்கும். மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 26 தொகுதிகள் மட்டுமே அனைவருக்குமான தொகுதிகளாக இருக்கும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு 6 தொகுதிகள் குறையும். எனினும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடங்கள் அதிகரிக்கப்படும் என அமித் ஷா கூறியுள்ளார். ஒரு மணி நேரம் அவகாசம் தாருங்கள்; திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்யத் தயார் என்று கூறினார்.

Tags : AMIT SHAH ,TAMIL NADU ,Delhi ,
× RELATED பிரதமர் மோடி அவசர ஆலோசனை