×

35 மதுபாட்டில்கள் பறிமுதல்

நத்தம், ஏப். 16: நத்தம் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நத்தம் எஸ்ஐ கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தம் பஸ் நிலையம் அருகேயுள்ள பகுதியில் கண்காணித்த போது வாலிபர் ஒருவர் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கொண்டையம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார் (39) என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து செந்தில் குமாரை கைது செய்து, அவரிடமிருந்த 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Natham ,SI ,Karthikeyan ,
× RELATED வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு