×

கருப்புசாமி கோயில் சித்திரை திருவிழா

வருசநாடு, ஏப். 16:தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாய்க்கால்பாறையில் அமைந்துள்ள பச்சைமலை பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பச்சைமலை பதினெட்டாம்படி கருப்பசாமி சிலைக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கருப்பசாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் பூசாரி சுருளிமலை பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழா குழு சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில், அனைவருக்கும் பிடிக்காசுகள் வழங்கப்பட்டது.

 

Tags : Chithirai festival ,Karuppasamy ,Varusanadu ,Chithirai ,Tamil New Year ,Pachaimalai Pathinettampadi Karuppasamy temple ,Vaikkalparai ,Theni district ,Pachaimalai Pathinettampadi Karuppasamy ,
× RELATED வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு