- Chathuragiri
- வத்திராயிருபு
- சத்திரகிரி சுந்தராமகாலிங்கம்
- சித்திராய்
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
வத்திராயிருப்பு, ஏப்.16: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறைகேட் திறக்கப்பட்டு பக்தர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே பக்தர்களை மலையேறி சொல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பிற்காக வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழ்நிலையில் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
