நீடாமங்கலத்தில் மகா மாரியம்மன் புஷ்ப பல்லாகில் வீதி உலா

நீடாமங்கலம்,ஏப்.16: நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோவில் புஷ்ப பல்லாக்கு வீதி உலா நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அருள் பாலித்துவரும் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 21 ம் தேதி காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 23 ம் தேதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை கஞ்சி வார்த்தை நிகழ்ச்சியும், மாலை பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 22ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். மதியம் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு அம்மன் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று 16ம் விடையாற்றியும், அம்மன் ஊஞ்சல் உட்சவமும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி பேச்சியம்மன் திருவிழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றர். ஏற்பாடுகளை தக்கார் சிவபெருமாள், ஆய்வாளர் இராசி, செயல் அலுவலர் ராஜேஸ்வரி, ஆலய அர்ச்சகர் ரவிச்சந்திரன் குழுக்கள் மற்றும் நகரவாசிகள், தமிழ் இளைஞர் பக்தர் கழகம் செய்து வருகின்றனர். தினந்தோறும் உபயதாரர்களின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது.

 

Related Stories: