திருத்துறைப்பூண்டி, ஏப்.16:திருத்துறைப்பூண்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99 ஆயிரத்து பத்து ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது இதனையடுத்து பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நாகை மாவட்டம் இறையாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.99 ஆயிரத்து பத்து ரூபாய் எடுத்து வந்தது தெரிய வந்தது இதனையடுத்து நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
