பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோவில் கைது

பேராவூரணி, ஏப்.16: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பேராவூரணி பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, நாதன் (51) என்ற கொத்தனார் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கன்னிகா, நாதன் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறையில் அடைத்தார்.

 

Related Stories: