கருப்பு கொடி போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு

திருச்சி, ஏப்.16: ஒன்றிய பாஜ அரசின் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதிக்கு எதிராக நடைபெறும் கருப்புக் கொடி போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீத் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இன்று (ஏப்.16) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றி அரசமைப்பில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நம் தோழமைக் கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பி வருகின்றன.

இதனை மாபெரும் வரலாற்று அநீதி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி, தமிழகத்தின் வலிமையான எதிர்ப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு தெரிவித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் நாளை (16.04.2026) ஒருநாள் மட்டும் தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடியை ஏற்றிடவும், தங்களது சட்டையில் கருப்பு பேஜ் அணிந்து தமிழர்களின் உரிமையை காக்கும் போராட்டத்திற்கு வலிமை சேர்த்திட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: