நாகப்பட்டினம்,ஏப்.16: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் என 3 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த 3 தொகுதிகளில் வரும் 23ம் தேதி வாக்களிக்க வாக்காளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு வாக்களிக்க வசதியாக பூத்சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப்பொதுத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத்சிலிப் வழங்கும் பணி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர் பெயர், எண், வாக்குச்சாவடி விவரங்கள் இருக்கும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சீட்டுகள், வரும் 23 தேதி நடக்கும் வாக்குப்பதிவிற்கு மிகவும் அவசியமானது.வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சரிபார்க்கவும், சரியான வாக்குச் சாவடியைக் கண்டறியவும் உதவுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஒ) வீடு வீடாக சென்று வழங்குகின்றனர்.
