×

நன்கொடை முறைகேடு; பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் ஊழியர் கைது

 

டேராடூன்: பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு என்பது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் மற்றும் பிற புனித தலங்களை நிர்வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிலையில் பத்ரிநாத் கோயிலுக்கான காணிக்கைகள் கையாடல் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இது குறித்து பைரவ் சேனா என்ற அமைப்பு போலீசில் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி கோயில் குழு அதிகாரி யுத்வீர் பார்ஸ்வர் பத்ரிநாத் காவல்நிலையத்தில் முறைகேடு குறித்து புகார் அளித்தார்.

இந்த புகாரில் கோயில் காணிக்கைகளை கோயில் ஊழியர் நவுதியால் கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து நவுதியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின்படி நவுதியால் சில பொருட்களையும் பணத்தையும் எடுத்துச்சென்றது தெரியவந்தது.இதையடுத்து நவுதியால் கைது செய்யப் பட்டார்.

Tags : Badrinath-Kedarnath Temple Committee ,Dehradun ,Badrinath Temple ,Uttarakhand ,
× RELATED தமிழ்நாட்டில் 2 நெடுஞ்சாலைகளுக்கு...