×

ராமர் கோயில் திருட்டு விவகாரம்: அறக்கட்டளை நிர்வாகிகளிடம் எஸ்ஐடி விரைவில் விசாரணை

 

அயோத்தி: உத்தரபிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிதி முறைகேடு புகார்கள் பற்றி விசாரிக்க லக்னோ பிரிவு ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த், ஐஜிபி கிரண் எஸ் மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து மாநில பாஜ அரசு கடந்த ஜூன் 15ம் தேதி உத்தரவிட்டது. இந்த குழுவினர் தங்களின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூன் 23ம் தேதி சிறப்பு விசாரணை குழுவின் தலைவர் லக்னோ பிரிவு ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் மாநில கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை) சஞ்சய் பிரசாத்திடம் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழுவினர் ஆவணங்களை ஆய்வு செய்யவும், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நன்கொடை நிர்வாகத்துடன் தொடர்புடைய பிறரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த குழு விரைவில் மீண்டும் அயோத்திக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

Tags : Ram ,Temple ,SIT ,Ayodhya ,Uttar Pradesh ,Lucknow ,Commissioner ,Vijay Vishwas Pant ,IGP ,Kiran S ,Finance Department ,Neel Ratan ,Ram Temple ,
× RELATED நன்கொடை முறைகேடு; பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் ஊழியர் கைது