புதுடெல்லி: எடல்வைஸ் நிறுவனத்தின் இஏஏஏ அல்டர்நேட்டிவ் நிறுவனம் தனது உள்கட்டமைப்புத் தளமான ‘யீல்டு ஸ்டர்டர்ஜி’ மூலம், தமிழ்நாட்டில் இரண்டு சுங்கச்சாவடி சாலைகளை இயக்குவதற்கான ஒப்பந்தங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ரூ. 2,259 கோடிக்கு பெற்றுள்ளது. இதன் மூலம் சுங்க வசூல், பராமரிப்பு மற்றும் உரிமை மாற்றம் திட்டத்தின் கீழ், 20 ஆண்டுகள் கால அளவுடன், தஞ்சாவூர்-திருச்சி மற்றும் மதுரை-தூத்துக்குடி ஆகிய 170 கி.மீ நீளமுள்ள சாலைப் பகுதிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
