×

நீட் தேர்வு ஓஎம்ஆர் தாள்களை வெளியிட்டது என்டிஏ

 

 

புதுடெல்லி; மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை தேசியத் தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது. இதன் மூலம், தேர்வர்கள் தங்கள் பதில்கள் குறித்த ஆட்சேபனைகளை ஜூலை 15க்குள் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து முதலில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21 அன்று இத்தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பதிலுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க தேர்வர்கள் ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NTA ,New Delhi ,National Testing Agency ,NEET ,
× RELATED நன்கொடை முறைகேடு; பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் ஊழியர் கைது