டாக்ஸிக் படத்தில் தபாஹி என்ற பாடலில் யஷ் உடன் கியரா அத்வானி படு நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இதனால் கியராவுக்கு எதிராக மீம்ஸ் விளாசலை பார்த்த டாக்ஸிக் படத்தில் நடித்த ஆங்கில நடிகர் பெனடிக்ட் கேரட் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘தபாஹி வீடியோ குறித்த விமர்சனங்களை பார்த்தேன், ஆம் நான் டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளேன்.
அதனால் நான் பேசவில்லை. ஒரு நடிகனாக பேசுகிறேன். மக்கள் யஷ்-ஐ பாராட்டுவதை பார்க்கிறேன், ஆனால் கியரா அத்வானியை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். கியாராவுக்கு கல்யாணமாகிவிட்டது, அவர் ஒரு தாய். கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு பதில் யஷுடன் ஹனிமூன் போயிருக்கிறார் என ரசிகர்கள் சொல்கிறார்கள்.
யஷுக்கும் கல்யாணமாகிவிட்டது. அவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு பெண்ணை மட்டும் விளாசுவது ஏன்? ஆணை பாராட்டுவது ஏன்? அவர்கள் இருவரும் நடிகர்கள், அவர்களின் வேலை நடிப்பது, கதாபாத்திரமாக மாறி உங்களை அவர்கள் நிஜமாக காதலிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்காக காதலிப்பது போன்று உங்களை நம்ப வைப்பது அவர்களின் வேலை’’ என கோபமாக பேசியிருக்கிறார்.

