×

ஜி.டி.நாயுடு பயோபிக்கிற்கு யு/ஏ சான்றிதழ்

இந்தியாவின் எடிசன் என்ற புகழுக்குரிய ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம், ‘ஜி.டி.என்’. இதில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தை இயக்கியிருந்த நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ‘ஜி.டி.என்’ படத்தை இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு, துஷாரா விஜயன், அதிதி பாலன், தம்பி ராமய்யா நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில், அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் தோன்றினார்.

வர்கீஸ் மூலன், விஜய் மூலன், மாதவன் மனைவி சரிதா, மாதவன் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வருகிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

Tags : G.T. ,G.T. Naidu ,Edison ,India ,Madhavan ,Krishnakumar Ramakumar ,Jayaram ,Sathyaraj ,Priyamani ,Yogi Babu ,Thushara Vijayan ,Aditi Balan ,Thambi Ramaiah ,
× RELATED மமிதாவுக்கு ரிலீசாகும் மூன்று படங்கள்