×

வீடியோவில் வாழ்த்த பணம் கேட்கும் நடிகை

கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, பிஎம்டபிள்யூ கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய ஆப் செயலியை தொடங்கியுள்ளார். அந்த ஆப்பில் அவர் போட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

அதாவது ரசிகர்களின் பிறந்தநாளுக்கு வீடியோ காலில் அவர்களுக்கு தர்ஷா வாழ்த்து சொல்ல ரூ. 6000, பிராண்ட் பிரமோஷனுக்கு ரூ. 50 ஆயிரம், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ. 1000, இதுதவிர 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டுகளுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் அதற்கு சலுகை ஆஃபர்களும் வழங்கியுள்ளார். இந்த கட்டணப் பட்டியலை பார்த்து நெட்டிசன்கள், நடிகைகள் இப்படி எல்லாம் இறங்கிட்டாங்களே என்று விமர்சித்து வருகிறார்கள்.

Tags : BMW ,Instagram ,Darsha Gupta ,Darsha ,
× RELATED மமிதாவுக்கு ரிலீசாகும் மூன்று படங்கள்