×

சினி மினி நியூஸ்

* எந்த தயாரிப்பு நிறுவனமும் தான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முன்வராததால் அவரது 64வது படத்தை சொந்தமாக தயாரிக்க முன்வந்துள்ளார் அஜித்குமார். ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

* எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்திருக்கும் ஸ்ரீலா, அதற்கான இன்டென்ஷிப் செஷ்ஷனிலும் அடுத்த எம்.டி படிப்பிற்காக நீட் தேர்வுக்கும் தயாராகி வருகிறாராம். இதன் காரணமாக தான் புது படங்கள் எதிலும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லையாம்.

* மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது. 2ம் கட்டமாக புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது. 40 நாட்களில் முழுபடத்தையும் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

* வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படமும் அதே நாளை குறிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* லோகா படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் சினி மாவில் நுழையும் கல்யாணி பிரியதர்ஷன் தற்போது ரன்வீர் சிங் நடிக்கும் ‘பிரளய்’ என்ற ஜாம்பி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். ரூ.300 கோடியில் உருவாகும் இப்படம் பாலிவுட்டில் உருவாகும் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பு சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

* நயன்தாரா, கவின் இணைந்து நடித்து வரும் ‘ஹாய்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அப்படத்தின் 2வது பாடலான ‘ரசகுல்லா’ நேற்று வெளியாகி யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றுதழ் தரப்பட்டுள்ளது.

* கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படம் வரும் ஆக்ஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் கியரா அத்வானி, தாரா சுதாரியா இருவரும் யஷின் ஜோடியாக நடிக்கின்றனர். ஹூமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் ஆகியோரின் வேடங்கள் புதிராகவே உள்ளது. சமீபத்தில் வெளியான பாடலில் யஷ் அருகில் நிற்கும் நயன்தாரா புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cine Mini News ,Ajith Kumar ,Anirudh ,Adhik Ravichandran ,Srila ,MBBS ,Mani Ratnam ,
× RELATED மமிதாவுக்கு ரிலீசாகும் மூன்று படங்கள்