×

போலி இன்ஸ்டா பக்கம் மூலம் ஆபாசம்: ஆண் நண்பர் மீது நடிகை புகார்

சென்னை: கன்னட நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி, சமூக வலைதளங்களில் தனக்குத் தொடர்ந்து நேர்ந்து வரும் ஆன்லைன் துன்புறுத்தல்கள் குறித்து பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள அந்தப் புகாரில், கடந்த இரண்டு மாதங்களாகச் சமூக வலைதளங்களில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் தனது பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் அவதூறான கருத்துகளையும் தன்னை இழிவுபடுத்தும் வகையிலான செய்திகளையும் தொடர்ந்து பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தரம் தாழ்ந்த செயல்கள் தனது நற்பெயருக்குக் கடுமையான களங்கத்தை விளைவிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நன்கு அறிமுகமான மன்னத் நகுல் என்ற நபரே வேறொரு பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி இந்த ஆபாச துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வரலாம் எனத் தனக்கு பலத்த சந்தேகம் இருப்பதாகவும் அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டிலும் இதே போன்ற சைபர் துன்புறுத்தலை ஐஸ்வர்யா சிந்தோகி எதிர்கொண்டார் அப்போதும் போலீசில் புகார் அளித்தார். இப்போது இந்த புகாரின் அடிப்படையில் சஞ்சய் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Instagram ,Chennai ,Aishwarya Chintogi ,Sanjay Nagar ,Bengaluru ,
× RELATED புதிய பயணத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வால்