×

‘ஓடிசி’ படத்தின் வசூல் ரூ.2700 கோடி: திடீர் ஓய்வு அறிவித்த கிறிஸ்டோபர் நோலன்

வாஷிங்டன்: ஹாலிவுட் படவுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர், கிறிஸ்டோபர் நோலன். அவரது இயக்கத்தில் உருவான படம், ’தி ஒடிசி’. இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டாயா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 17ம் தேதி ரிலீசானது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து 4 நாட்களான நிலையில், உலகம் முழுவதும் 2,700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் 2,100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. பிறகு கிறிஸ்டோபர் நோலனிடம், ‘தி ஒடிசி’ படத்துக்காக ரசிகர்கள் 3 வருடங்கள் காத்திருந்தனர். உங்களின் அடுத்த படம் வெளியாக, மீண்டும் 3 வருடங்களாகுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அதற்கு மேலும் ஆகலாம். காரணம், அடுத்த 3 வருடம் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்’ என்றார்.

Tags : Christopher Nolan ,Washington ,Hollywood ,Matt Damon ,Tom Holland ,Anne Hathaway ,Zendaya ,India ,
× RELATED புதிய பயணத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வால்