- சென்னை
- ஹரிஷ் துரிராஜ்
- பவர் ஹவுஸ் படங்கள்
- அர்ஜூன் தாஸ்
- அன்னா பென்
- சுருக்கராசி
- விடிவி கணேஷ்
- யோகி பாபு
- மாஸ்டர் அச்சிலன்
- ஷான் ரோல்டன்
- திருவிழா
சென்னை: ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைக்கு வந்த படம், ‘கான் சிட்டி’. இதில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, விடிவி கணேஷ், யோகி பாபு, மாஸ்டர் அகிலன் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் 25வது நாள் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது வடிவுக்கரசி உருக்கமாக பேசியதாவது: இன்று நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.
என் இதயத்தில் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டபோது, எனக்கு மறுவாழ்வு கிடைக்க உடனே உதவி செய்தவர்கள் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா, சுஹாசினி, கார்த்தி, சூர்யா, ரஜினிகாந்த், மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.சி.சண்முகம், சரத்குமார், ராதிகா ஆகியோர்.
அவர்கள் பல லட்ச ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தனர். அந்த அன்பை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நான் நடிக்க வந்து 48 ஆண்டுகளாகி விட்டது. 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். படப்பிடிப்பில் இருக்கும்போதே எனது உயிர் பிரிய வேண்டும் என்பதே என் விருப்பம்.
