மலையாள நடிகர் துல்கர் சல்மான், திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘காந்தா’ ஆகிய படங்களுக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். தற்போது அவர் ‘ஐயம் கேம்’, ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘ஐயம் கேம்’ என்ற படம், வரும் ஆகஸ்ட் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தனது 41வது படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.
ரவி நெலகுடிதி இயக்கும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்துக்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே பள்ளி சீருடையில் அமர்ந்துள்ளனர். இப்படம் ஒரு பள்ளிப் பருவ காதல் கதையாக உருவாக்கப்படுகிறது.
