×

300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படமான அரூபி

சென்னை: மலையாளத்தில் உருவான ‘அரூபி’ என்ற படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்‌ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால், கிரண் ராஜ் நடித்துள்ளனர். எழுதி அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ளார். புனர்த்தம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிக்க, வினீத் வி.டி எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து அபிலாஷ் வாரியர் கூறுகையில், ‘‘அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. பின்னணி இசை அமைப்பாளர் கோபி சுந்தர், ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், எடிட்டர் கிஷோர் மோகன் உள்பட அனுபவம் கொண்ட டெக்னீஷியன்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்’ என்றார்.

நேஹா சாவ்லா கூறும்போது, ‘நான் டெல்லியை சேர்ந்தவள். ஹாரர் படமான இது, 300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படமாக்கப்பட்டது’ என்றார். சாக்‌ஷி படாலா கூறுகையில், ‘பேசும் மொழி எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும், மலையாளத்தில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதன் வரிகளை கற்றுக்கொண்டு சிறப்பாக நடனமாடினேன்’’ என்றார்.

Tags : Chennai ,Vishak Ravi ,Neha Chawla ,Sakshi Patala ,Joy Mathew ,Sindhu Varma ,Kannan Sagar ,Vijupal ,Kiran Raj ,Abhilash Warrier ,Pradeep Raj ,Punartham Productions ,Vineeth ,
× RELATED ஆனந்த் ராமை மணக்கிறார் பிரிகிடா