×

70 சதவீத காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படமாக்கப்பட்ட தி டார்க் ஹெவன்

சென்னை: கோதை எண்டர்டெயின்மெண்ட், எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள படம், ‘தி டார்க் ஹெவன்’. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தி கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இதில், ‘5 கொலைகள் ஒரே பாணியில் நடக்கிறது. ஆனால், எந்த தடயமும் இல்லை’ என்ற புள்ளியில் கதை தொடங்குகிறது. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல.ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு நடித்துள்ளனர்.

பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். மணிகண்டன் பி.கே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். ராஜா ஆறுமுகம் எடிட்டிங் செய்ய, லாவர்தன் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 17ம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.

இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் ரித்விகா பேசுகையில், ‘இந்த படம் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு ரிலீசாகிறது. 70 சதவீத படத்தை உருவாக்கிவிட்டு, பிறகு அந்த காட்சிகளை வேண்டாம் என்று நீக்கிவிட்டு, மீண்டும் அதே காட்சிகளை, அதே லொகேஷன்களில் படமாக்கி, ரிலீஸ் வரை கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய சாதனை’ என்றார்.

Tags : Kothai Entertainment ,M.S. Swiss Film Factory ,Sidhu ,Darshika ,Rithvika ,Vela ,Ramamoorthy ,Nizhalgal Ravi ,Chaplin Balu ,Balaji ,Manikandan PK ,Shakti Balaji ,
× RELATED ஆனந்த் ராமை மணக்கிறார் பிரிகிடா