×

ஜூனியர் என்டிஆர் பட சர்ச்சை முருக கடவுள் வடநாட்டில் பிறந்தாரா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு

சென்னை: இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய பான் இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பை நேற்றுமுன்தினம் மாலை வெளியிட்டனர். தமிழ் கடவுள் முருகனை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியிட்ட போஸ்டரில் ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லை என கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் நாக வம்சி, தனது பதிவில் ‘‘Born in the North, Forged in the Heartland, Worshipped in the South, Now… A tale destined to belong to the universe” என குறிப்பிட்டுள்ளார்.

இதில் ‘‘Born in the North” அதாவது, வடநாட்டில் பிறந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கடவுள் முருகனை எப்படி இப்படி கூற முடியும், வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிக்கிறீர்களா என நெட்டிசன்கள் உள்பட பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் பின்னணியில் பாஜ இருப்பதாகவும், ராமரை வைத்து அரசியல் செய்த பாஜ இப்போது, முருகனை வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Lord Muruga ,North ,Chennai ,Pan India ,Trivikram ,God ,Muruga ,Naga Vamsi ,
× RELATED ஆனந்த் ராமை மணக்கிறார் பிரிகிடா