கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தை ஆராயுங்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் அதுல் லிமாயே எச்சரிக்கை

 

ஆர்எஸ்எஸ் இணைப்பொதுச்செயலாளர் அதுல் லிமாயே எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில்,’ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பான இயக்கத்தின் தோற்றம் தேசிய கண்ணோட்டம் கொண்ட அமைப்புகள் இளைஞர்களிடையே இருப்பதை எவ்வளவு அவசியமாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ள, நிகழ்வுகளின் வரிசை, வழிமுறை, ஆதரவு கட்டமைப்புகள், வலைப்பின்னல்கள், புதுமையான அணுகுமுறைகள் மற்றும் அதை இயக்கும் அடிப்படை கருத்தியல் ஆகியவற்றை நடுநிலையாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் விரிவான பட்டியலை ஆராய்வதிலேயே அதற்கான விடை உள்ளது.

இது திரைக்குப் பின்னால் செயல்படும் ஆதரவு அமைப்பின் பல்வேறு அடுக்குகளை வெளிப்படுத்துகிறது. இது முக்கியமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம் என்பதால், அனைத்திந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் இதில் தீவிரமாகப் பங்கேற்றன. மனித உரிமைகள், பழங்குடியினர் விவகாரங்கள், பெண்கள் உரிமைகள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்கள், இதழியல் மற்றும் சட்ட உதவி ஆகிய துறைகளைச் சார்ந்த ஏராளமான அமைப்புகளும் இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றன.

இவ்வளவு மாறுபட்ட மற்றும் தனித்துவமான துறைகளைச் சேர்ந்த அமைப்புகளை ஒரே மேடையில் கொண்டு வந்தது யார்? . இந்த வலைப்பின்னலின் செயல்பாட்டு இயக்கவியலைப் புரிந்துகொள்ளாமல், இந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. முழுக்க முழுக்க மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு இயக்கம் எப்படி ஒரே இரவில் அரசியல் சார்ந்த இயக்கமாக மாறியது? நாடு முழுவதும் இத்தகைய செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு எவ்வாறு சாத்தியமானது? இந்த இயக்கம் எவ்வாறு விரிவடைந்து, வெளிநாடுகளில் கூட ஆதரவைப் பெற்றது?’ என்றார்.

Related Stories: