பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்: ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பாட்னா: பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று ராஜினாமா செய்த பங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார்.

பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுவாரஸ்யமான சூழல் நிலவி வருகிறது. பாஜக ஆளும் பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பீகாரின் பாங்கிப்பூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிதின் நபீன் வகித்த பதவி காலியானதால் தேர்தல் நடத்தப்பட்டது.

இதேபோல குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் யோகேஷ் படேல் மறைவாலும், மத்திய பிரதேசத்தின் டாடியா தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிகள் முழுவதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பங்கிப்பூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 41.22% வாக்குகளை பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 1,28,475 வாக்குகளில், 63,203 வாக்குகல் பெற்று வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதல்முறையாக பிரசாந்த் கிஷோர் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.

1995-க்கு பிறகு முதல் முறையாக பங்கிப்பூர் தொகுதியில் பாஜக தோல்வியை தழுவியது.

Related Stories: