×

முத்துப்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பேரூராட்சி தலைவர் தலைமையில் சாலை மறியல்!

 

திருவாரூர்: முத்துப்பேட்டையில் பகுதியில் அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பேரூராட்சி தலைவர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காத தமிழக அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பேரூராட்சி தலைவர் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத தமிழக அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் (திமுக), துணைத் தலைவர் சிவக்குமார் (திமுக) ஆகியோர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வழிதடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போராட்டத்திற்காக பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது

Tags : Muthupettai ,Town Panchayat Chairman ,Water Supply and Drainage Board ,Thiruvarur ,Tamil Nadu government ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...