சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பூக்கள், பழங்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதர பூக்கள்: முல்லை, ரோஜா மற்றும் பன்னீர் ரோஜா போன்ற பூக்களின் விலையும் தேவையின் அதிகரிப்பு காரணமாக பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆடிப்பெருக்கு மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் காரணமாக பூக்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.வரத்து குறைவு: நிலவும் கடுமையான வெயில் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து, சந்தைக்கு வரும் வரத்து குறைந்துள்ளது.
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை மற்றும் பிச்சி பூ ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.ரோஜா மற்றும் செவ்வந்தி ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.350 வரை யிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 வரையிலும், செவ்வாழை காய் ஒன்று ரூ.8 வரையிலும் ஏலம் போனது.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று நடை பெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும். ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கும், செவ்வாழை ஒரு காய் ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போனது. வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
