திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் கிராம சாலைகள் செப்பனிட வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி மூன்று வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிராம சாலைகள் செப்பனிட்டு வேண்டும் எம்எல்ஏ அமைச்சர் நேரில் சந்தித்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து மனு வழங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து ஊரகவளர்ச்சி (ம) உள்ளாட்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிராம சாலைகள் செப்பனிட்டு வேண்டும் இதில் கோட்டூர் வட்டாரம் குலமாணிக்கம் ஊராட்சி நறுவளிக்களப்பால் கள்ளியூர் இணைப்பு கிராமசாலை 2 கி.மீ தார் சாலையாக தரம் உயர்த்திட வேண்டும். முத்துப்பேட்டை வட்டாரம் எடையூர் ஊராட்சி, எடையூர் சோத்திரியம் கிராம சாலை தார் சாலையாக தரம் உயர்த்திட வேண்டும்.

திருத்துறைப்பூண்டி வட்டாரம் சேகல் ஊராட்சி, தீவாம்பாள் பட்டினம் கிராம சாலை கி.மீ தார் சாலையாக தரம் உயர்த்திட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள கிராம சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கான முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் எனவே நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரை செய்திட வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: